உள்ளூர் செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- பெரம்பலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- டிரைவர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம், அகில இந்திய உழைப்பாளர் டிரைவர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூரில் தமிழ்நாடு அனைத்து மாவட்ட டிரைவர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம், அகில இந்திய உழைப்பாளர் டிரைவர் நலச் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பெரம்பலூர் பாலக்கரை தொடங்கிய பேரணியை மாவட்ட தலைவர் வடிவேல் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.பேரணி வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குப்பேட்டை, கடைவீதி வழியாகச்சென்று உள்ள வானொலி திடலில் முடிவடைந்தது.பேரணியில் சாலை விதிகளை கடைபிடிப்போம், ஹெல்மட் அணிவோம், மிதவேகம் மிக நன்று போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய கோஷமிட்டு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் சங்க நிர்வாகிகள், டிரைவர்கள், தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.