உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் கிணற்றில் விழுந்த கன்று குட்டி மீட்பு

Published On 2022-10-30 15:18 IST   |   Update On 2022-10-30 15:18:00 IST
  • பசு கன்று குட்டி வீட்டிற்கு அருகில் உள்ள 10 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்து விட்டது.
  • கிணற்றில் அதிக ப்படியான செடி கொடிகள் படர்ந்து இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கன்று குட்டியை மீட்க முடியவில்லை.

பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள பென்ணக்கோணம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் மனைவி மகாதேவி (வயது45)

இவருக்கு சொந்தமான பசு கன்று குட்டி உள்ளது.இவரது வீட்டிற்கு அருகில் உள்ள சுமார் 5 அடி நீளம் 5 அடி அகலம் கொண்ட 10 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்து விட்டது.

கிணற்றில் அதிக ப்படியான செடி கொடிகள் படர்ந்து இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கன்று குட்டியை மீட்க முடியவில்லை. இதையடுத்து வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பெயரில் விரைந்து சென்று தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் ராஜராஜன் தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.

Tags:    

Similar News