உள்ளூர் செய்திகள்

நிலப்பிரச்சினையை தீர்க்க சிறப்பு முகாம்

Published On 2022-06-12 13:10 IST   |   Update On 2022-06-12 13:10:00 IST
  • நிலப்பிரச்சினையை தீர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
  • 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின் படி ஆலத்தூர் வட்ட வருவாய் துறை மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாமை ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடத்தினர்.

முகாமில் ஆலத்தூர் தாசில்தார் முத்துகுமார், மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முகமது அபுபக்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணாவதி மற்றும் போலீசார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து நிலம் தொடர்பான பிரச்சினைகள் அடங்கிய 11 மனுக்களை வாங்கினர். அதில் 10 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News