உள்ளூர் செய்திகள்

வேப்பந்தட்டையில் கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2022-10-30 15:21 IST   |   Update On 2022-10-30 15:21:00 IST
  • நூத்தப்பூர் கிராமத்தில் வடக்கு பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செல்லியம்மன் கோவில் உள்ளது
  • ஆக்கிரமிப்பை பெரம்பலூர் இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் அரவிந்தன், நில அளவர்கள் ஆகியோர் கிராம மக்கள் முன்னிலையில் அகற்றினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நூத்தப்பூர் கிராமத்தில் வடக்கு பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செல்லியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அந்த ஆக்கிரமிப்பை பெரம்பலூர் இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் அரவிந்தன், தனி தாசில்தார் பிரகாசம், நூத்தப்பூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர், நில அளவர்கள் ஆகியோர் கிராம மக்கள் முன்னிலையில் அகற்றினர்.

மேலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் இந்து சமய அறநிலையத்துறை பிரிவு 70 பி-யின் படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டது.

Tags:    

Similar News