உள்ளூர் செய்திகள்

ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் பெரம்பலூர் 4-வது இடம்

Published On 2022-09-22 15:02 IST   |   Update On 2022-09-22 15:02:00 IST
  • ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் பெரம்பலூர் 4-வது இடம் பிடித்துள்ளது.
  • 100 சதவீதம் இலக்கு எட்டப்பட்டுள்ளது

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்ட பணி குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்கும் பணியானது கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் பெரம்பலூர் மாவட்ட வாக்காளர்கள் ஆர்வமுடன் தாமாக முன்வந்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைத்து கொண்டதால், மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 4-வது இடம் பெற்றுள்ளது மேலும் 4 வாக்கு சாவடிகளில் 100 சதவீதம் இலக்கு எட்டப்பட்டுள்ளது, என்றார். 

Tags:    

Similar News