உள்ளூர் செய்திகள்
புதுவேட்டக்குடி கிராமத்தில் ஓம் பராசக்தி ஆலய கும்பாபிஷேக விழா
- புதுவேட்டக்குடி கிராமத்தில் ஓம் பராசக்தி ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது
- இரவு சுவாமி திரு வீதி உலா வான வேடிக்கையுடன் நடைபெற்றது
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள புதுவேட்டக்குடி கிராமத்தில் எழுந்தரு ளியிருக்கும் சக்தி விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகங்கள், ஓம் பராசக்தி அம்மன், ஆகிய தெய்வங்களுக்கு மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் மகா கும்பா பிஷேகம் நடை பெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை மங்கள இசை, நாடி சந்தானம், ஸ்பார்சாஹீதி, திரவ்யாஹுதி,கோபூஜை, ஹோமம், மற்றும் பூர்ணாஹீதி, நடைபெற்றது. இரவு சுவாமி திரு வீதி உலா வான வேடிக்கையுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுவேட்டக்குடி, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை புதுவேட்டக்குடி கிராம கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.