உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சர்

Published On 2022-06-12 13:14 IST   |   Update On 2022-06-12 13:14:00 IST
  • விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் அமைச்சர்
  • அமைச்சரின் செயலைக்கண்டு பொதுமக்கள் பாராட்டினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கு பெற்றார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகளுடன் அரியலூர் திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர் வரும் வழியில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் வரிசைப்பட்டி அருகே அரியலூர் வட்டம் வெள்ளூர் காலனியைச் சேர்ந்த வெள்ளமுத்து, (வயது-53),அவரது மனைவி பொன்னழகி (48) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து போது நிலைதடுமாறி கீழே விழுந்து படு காயமடைந்தனர்.

இதைக் கண்டதும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரும், அவருடன் வந்தவர்களும் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு படுகாயமடைந்த தம்பதியினருக்கு முதலுதவி செய்து 108ஆம்புலன்சுக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவர்களை ஏற்றி அரியலூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்து நடந்த இடத்தில் வேடிக்கை பார்ப்பதற்காகக் கூடி நின்ற பொதுமக்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் எடுத்துக் கூறினார். போக்குவரத்து விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தால் இது போன்ற விபத்துக்களில் இருத்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் எடுத்துரைத்தார். அமைச்சரின் இந்த மனிதாபிமான செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன் அமைச்சரை பாராட்டிச் சென்றனர்.

Tags:    

Similar News