உள்ளூர் செய்திகள்

விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம்

Published On 2022-09-06 13:59 IST   |   Update On 2022-09-06 13:59:00 IST
  • விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
  • அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயின்ற 5,423 மாணவ-மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 75 லட்சத்தில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா பெரம்பலூர் அரசு பள்ளியில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதேபோல் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் அமைச்சர் சிவசங்கர் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினார்.

Tags:    

Similar News