உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

Published On 2022-11-06 14:32 IST   |   Update On 2022-11-06 14:32:00 IST
  • கருத்தரங்கை தனலட்சுமி சீனிவாசன் பல்கலை க் கழகத்தின் வேந்தர் அ.சீனிவாசன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
  • திருச்சி என்.ஐ.டி. ஆய்வு குழுவின் பேராசிரியர் வேல்மதி சுற்றுச்சூழலில் படிகங்களின் பயன்பாடுகள் என்ற தலைப்பில் பேசினர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கருத்தரங்கை தனலட்சுமி சீனிவாசன் பல்கலை க் கழகத்தின் வேந்தர் அ.சீனிவாசன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

முதல்வர் நா. வெற்றி வேலன் வாழ்த்துரை வழங்கினார். முதல் அமர்வில் பிரேசில் காம்பினாஸ் பல்கலைக்க ழகத்தைச் சேர்ந்த முதுநிலை ஆராய்ச்சியாளர் சில ம்பரசன், மைக்ரோ மற்றும் நானோ பொருட்களின் அமைப்புகளில் இன்றைய சுற்றுச்சூழல் என்ற தலைப்பிலும், திருச்சி என்.ஐ.டி. ஆய்வு குழுவின் பேராசிரியர் வேல்மதி சுற்றுச்சூழலில் படிகங்களின் பயன்பாடுகள் என்ற தலைப்பிலும் பேசினர். இந்த அமர்வுக்கு பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

இரண்டாம் அமர்வில் மின் காந்த பொருட்களை எவ்வாறு சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்துவது என்னும் தலைப்பில் திருச்சி அண்ணா பல்கலை க்கழகத்தின் பேராசிரியர் பிரகதீஸ்வரன் தனது ஆய்வு அறிக்கையை விளக்கி கூறினார். முன்னதாக இயற்பியல் துறையின் தலைவர் சு.மணிமாறன் வரவேற்று பேசினார்.

கருத்தரங்கில் மாணவ , மாணவிகள் தங்களின் சந்தேகங்களை சிறப்பு விருந்தினர்க ளுடன் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர்.

இதில் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 120க்கும் அதிகமான ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News