உள்ளூர் செய்திகள்

மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை

Published On 2023-08-14 12:02 IST   |   Update On 2023-08-14 12:02:00 IST
  • மனைவி இறந்த சோகத்தில் மங்களமேடு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்
  • தூக்கில் தொங்கிய உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

பெரம்பலூர்,

மங்களமேடு இந்திராநகர் பகுதியை சேர்ந்த பொன்னன் என்பவரின் மகன் வெங்கடேஷன்(வயது 30). கூலி தொழிலாளியான வெங்கடேஷன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக, தனது மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் வெங்கடேஷனின் மனைவி உயிரிழந்துள்ளார். மேலும் வெங்கடேஷனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு, வலது கால் செயல் இழந்து உள்ளது. இதன் காரணமாக இவர்களின் இரண்டு வயது மகள் இஷிகாவை, வெங்கடேஷனின் பெற்றோர்கள் வளர்த்து வந்துள்ளனர். வலது கால் செயல் இழந்ததால், வெங்கடேஷனால் கூலி தொழிலுக்கு தொடர்ந்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. மனைவி இறந்த துக்கத்தோடு, தானும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை எண்ணி மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில மனவிரக்தி அடைந்த அவர் தனது வீட்டில், துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு வந்த மங்களமேடு போலீசார் உடலை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News