உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை முயற்சி

Published On 2022-06-07 15:11 IST   |   Update On 2022-06-07 15:11:00 IST
  • கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
  • பட்டா வழங்க கோரி தீக்குளிக்க முயன்றார்.

பெரம்பலூர் :

பெரம்பலூர் வடக்குமாதவி ஏரிக்கரையை சேர்ந்த ரெங்கராஜ் மகன் சந்துரு (வயது54). இவர்கலெக்டர் அலுவலக வளாக்ததில் தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார், அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்து போலீசார் ஓடி வந்து அவரை தடுத்து அவரிடம் விசாரித்தனர்.

சந்துரு கூறுகையில், கடந்த 1972ம் ஆண்டு பெரம்பலூர் திருநகரில் குடிசை வீடு கட்டி வசித்து வந்தோம். அந்த இடத்தை பிஎஸ்என்எல் அலுவலகத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது எனது அம்மா கனகத்தம்மாள் பெயரில் உள்ள நிலமும் கையகப்படுத்தப்பட்டது.

அதற்கு பதிலாக வடக்கு மாதவியில் 3 சென்ட் நிலம் கனகத்தம்மாள் பெயரில் பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்தோம் எனது தாய் 2010ல் இறந்து விட்டார்.

அதன் பிறகு பிழைப்புக்காக சென்னை சென்று விட்டேன். எனது தாய் பெயரில் உள்ள இடத்தில் மாணிக்கத்தம்மாள் என்பவர் நத்தம் பட்டா வாங்கி கொண்டு அந்த இடத்தில் தற்போது ஆறுமுகம் மனைவி லெட்சுமி என்பவர் வீடு கட்டி வருகிறார்.

எனவே மாணிக்கத்தம்மாள் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்துவிட்டு எனது பெயரில் பட்டா வழங்கவேண்டும் என கூறினார். இந்த தீக்குளிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News