உள்ளூர் செய்திகள்

தி.மு.க.புதிய நிர்வாகிகள் நியமனம்

Published On 2022-11-30 14:30 IST   |   Update On 2022-11-30 14:30:00 IST
  • தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்
  • நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூரை சேர்ந்த முன்னாள் தி.மு.க. வரகூர் எம்.எல்.ஏ. வக்கீல் பா. துரைசாமி தி.மு.க. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வேப்பூரை சேர்ந்த வி.எஸ். பெரியசாமி மாநில வர்த்தக அணி துணை செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா பரிந்துரையின் அடிப்படையில் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் மேற்கண்ட நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.

புதிய நிர்வாகிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன், டாக்டர் வல்லவன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News