உள்ளூர் செய்திகள்
ஒப்பந்த மின் ஊழியர் பேரவை கூட்டம்
- ஒப்பந்த மின் ஊழியர் பேரவை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்ட கிளை சார்பாக ஒப்பந்த ஊழியர் சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்து பேசினார். இதில் மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூ.380 வழங்கிட கோரி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கலெக்டரிடம் வரும் 4ம்தேதி மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொறுப்பாளர்கள் வினோதன் ,அபிமன்னன், மலரவன், குப்புசாமி, கருப்பையா, பெருமாள், மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.