உள்ளூர் செய்திகள்
அங்கன்வாடி மையத்திற்கு நாற்காலி வழங்கும் விழா
- பாடாலூர் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு நாற்காலி வழங்கும் விழா நடைபெற்றது
- பாடாலூர் எதிர்நீச்சல் சமுதாய நற்பணி மன்றம் சார்பில் வழங்கப்பட்டது
பாடாலூர்,
ஆலத்தூர் தாலுகா பாடாலூர் எதிர்நீச்சல் சமுதாய நற்பணி மன்றம் சார்பில் ஊராட்சிக்கு உட்பட்ட அரச மரத்தெரு அங்கன்வாடி மையம் மற்றும் நடுத்தெரு அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி குழந்தைகள் அமர்ந்து பாடத்தை கவனிக்கும் வகையில் அவர்களுக்கு சேர் வழங்கப்பட்டது. மேலும் பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் அமரும் வகையில் அதன் அதன் வளாகத்தில் சிமெண்ட் இருக்கையும் எதிர்நீச்சல் சமுதாய நற்பணி மன்றம் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள் மணிவேல், ஆனந்த், பாலு, ராஜா கனகராஜ், கலாநிதி, சுரேஷ், சீனிவாசன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.