உள்ளூர் செய்திகள்

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு

Published On 2022-06-08 15:35 IST   |   Update On 2022-06-08 15:35:00 IST
  • குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
  • பொது மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது

பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் கொத்தடிமைகள் முறை ஒழிப்பு குறித்து திடீராய்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி பாண்டியன் மேற்பார்வையில் பெரம்பலூர் நகரில் குழந்தை தொழிலாளர் ஆணையர் மூர்த்தி, குழந்தை தொழிலாளர் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப் இன்ஸ்பெக்டர் மருதமுத்து, ஏட்டு தேவி மற்றும்

அலுவலர்கள் பாலாரியாஷினி, ரேகா ஆகியோர் கொண்ட குழுவினர் பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட், நான்குரோடு, பாலக்கரை, சிறுவாச்சூர் போன்ற பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனரா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியும், பொது மக்களிடம் துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News