உள்ளூர் செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கான தன்னம்பிக்கை பயிலரங்கம்
- மாணவ-மாணவிகளுக்கான தன்னம்பிக்கை பயிலரங்கம் நடந்தது.
- தஞ்சை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் பங்கேற்பு
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான தன்னம்பிக்கை பயிலரங்கமும், 1893-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வ சமய மாநாட்டில் பாரதத்தின் பெருமையை எடுத்துரைத்த தினத்தை நினைவு கூறும் விழாவும் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கி பேசுகையில், தன்னம்பிக்கை கொண்ட சுவாமி விவேகானந்தர் உலக புகழ்பெற்றார். ஆகவே மாணவர்கள் அனைவரும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக உருவாக வேண்டும், என்று கூறினார்.