உள்ளூர் செய்திகள்

வேளாண் வளர்ச்சிக்காக பெரம்பலூரில் 25 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.18.63 லட்சம் நிதி

Published On 2023-05-22 07:51 GMT   |   Update On 2023-05-22 07:51 GMT
  • வேளாண் வளர்ச்சிக்காக பெரம்பலூரில் 25 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.18.63 லட்சம் நிதி ஒதுக்கபட்டுள்ளது
  • திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 25 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.18.63 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தோட்டக்கலை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 25 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில் (2023-24) இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 25 கிராம ஊராட்சிகளில் காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த பழச்செடி தொகுப்புகள் வழங்குதல் மற்றும் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்கள் பரப்பு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும். இத்திட்டத்தில் பயனடைய பெண்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது இணையதளத்தின் மூலமாக பதிவு செய்தோ பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News