உள்ளூர் செய்திகள்

வழிபாடு நடத்திய மக்கள்.

வடமதுரை அருகே கோவில் பூட்டை உடைத்து வழிபாடு நடத்திய பொதுமக்கள்

Published On 2022-12-22 07:20 GMT   |   Update On 2022-12-22 07:20 GMT
  • மடத்தில் வழிபாடு நடத்திய பொது மக்கள் இரு பிரிவுகளாக பிரிந்தனர்.
  • பூட்டை உடைத்து வழிபாடு நடத்தினர். அங்கு சிவன் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

வடமதுரை:

வடமதுரை அருகே எஸ்.பாறைப்பட்டியில் உள்ள மடத்தின் வளாகத்தில் சிவன்கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிராம மக்கள் சார்பில் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மடத்தில் வழிபாடு நடத்திய பொது மக்கள் இரு பிரிவுகளாக பிரிந்தனர். பிரதோசத்தை யொட்டிநேற்று காலை ஒரு தரப்பினர் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் அவர்கள் கோவிலை பூட்டி சென்றனர். மாலையில் மற்றொரு தரப்பினர் வழிபாட்டிற்காக வந்தபோது பூட்டின் சாவியை எதிர்தரப்பினர் தரவில்லை.

இதனால் அவர்கள் பூட்டை உடைத்து வழிபாடு நடத்தினர். அங்கு சிவன் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவிலில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையில் வடமதுரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பூட்டை உடைத்து கோவிலில் பொதுமக்கள் பூஜை நடத்திய சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News