உள்ளூர் செய்திகள்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

பாவூர்சத்திரம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2023-03-01 15:07 IST   |   Update On 2023-03-01 15:07:00 IST
  • கோவிலுக்கு பாத்தியப்பட்ட நில பட்டாவுடன், தனிநபர்கள் பெயர்களை சேர்த்து பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  • துணை தாசில்தார் காதர்மைதீன், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சிக்குட்பட்ட சிவசுப்பிரமணியபுரம் கிராமத்தில் ராமசாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட நில பட்டாவுடன், தனிநபர்கள் பெயர்களை சேர்த்து பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மண்டல துணை தாசில்தார் காதர்மைதீன் மற்றும் பாவூர்சத்திரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆவுடையனூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

பாவூர்சத்திரம் அருகே சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கிராம நிர்வாக அலுவலகத்தை பள்ளி குழந்தைகளுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதில் தமிழன் மக்கள் நல சங்க நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News