உள்ளூர் செய்திகள்

மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பரப்பலாறு அணை.

ஒட்டன்சத்திரம் அருகே பரப்பலாறு அணையில் பூங்கா, படகுசவாரி தொடங்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

Published On 2023-01-01 11:02 IST   |   Update On 2023-01-01 11:02:00 IST
  • பரப்பலாறு அணை ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.
  • பரப்பலாறு அணையில் வனத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை இணைந்து பூங்கா அமைத்து படகுசவாரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. இதன் மொத்த உயரம் 90 அடியாகும். அணையின் 197.95 மி.கனஅடி தண்ணீர் தேக்கலாம். 266 அடி நீலம் கொண்டதாகும். பாச்சலூர், வடகாடு, சிறுவாட்டுக்காடு, உள்ளிட்ட மலைகிராமங்களில் பெய்யும் மழைநீர் பரப்பலாறு அணைக்கு வருகிறது.

ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும் 6 குளங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு நங்காஞ்சியாறு படுகையில் விருப்பாச்சி முதல் ஜவ்வாதுபட்டி வரை தடுப்பணைகள், ஆழ்துளைகிணறுகளுக்கு நீர்மட்டம் உயர வழிவகை செய்கிறது. மேலும் இடையகோட்டை, நங்காஞ்சியாறு அணை வழியாக கரூர் அமராவதியாற்றில் கலக்கிறது.

ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகளுக்கு இந்த தண்ணீர் பயனுள்ளதாக உள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் இந்த பகுதிகள் வெளிஉலகுக்கு தெரியவில்லை.

பரப்பலாறு அணையில் வனத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை இணைந்து பூங்கா அமைத்து படகுசவாரி ெதாடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுமுறை காலங்களில் கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

அதுபோன்ற சமயங்களில் இங்குவரவும் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் அரசுக்கு வருவாயும் கிடைக்கும். மேலும் இப்பகுதி வியாபாரிகளுக்கும் உதவியாக இருக்கும். எனவே பரப்பலாறு அணையில் பூங்கா மற்றும் படகுசவாரி தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News