உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வத்தலக்குண்டுவில் விசாரணைக்கு அழைத்துச் செல்வதை கண்டித்து சாலைமறியல்

Published On 2022-10-27 05:24 GMT   |   Update On 2022-10-27 05:24 GMT
  • வத்தலக்குண்டுவில் இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவானது.
  • ஒருதரப்பினரை மட்டும் விசாரணைக்கு அழைத்ததால் பழைய வத்தலக்குண்டு பிரிவில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு மேற்குத்தெரு மற்றும் பட்டாளம்மன் கோவில் தெரு பகுதி மக்களிடையே தீபாவளி நாளில் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவானது.

இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று இருதரப்பை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் பழைய வத்தலக்குண்டு பகுதிக்கு சென்று மேலும் 2 பேரை விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல போவதாக தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் ஒருதரப்பை சேர்ந்தவர்களை மட்டுமே குறிவைத்து கைது செய்வதாகவும், தாங்கள் விசாரணைக்கு யாரையும் அனுப்பமாட்டோம் என தெரிவித்தனர். ஆனால் போலீசார் தாங்கள் விசாரணை செய்துவிட்டு அனுப்பிவிடுவதாக கூறியும் பொதுமக்கள் கேட்கவில்லை. இதனை தொடர்ந்து பழைய வத்தலக்குண்டு பிரிவில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்த நிலக்கோட்டை டி.எஸ்.பி. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். யாரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News