உள்ளூர் செய்திகள்

குன்னூரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

Published On 2023-09-02 09:09 GMT   |   Update On 2023-09-02 09:09 GMT
  • மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
  • அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஊட்டி,

குன்னூா் அருகே இந்திரா நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு போதிய கழிப்பறை வசதி கள் இல்லை. எனவே அங்கு வசிக்கும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்திரா நகரில் நடைபாதை வசதி இல்லை. தடுப்புச் சுவா் கட்டப்படவில்லை. எனவே பொது மக்கள் ஆபத்தான நிலை யில் குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் குன்னூர் இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி, குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில், காா்த்திக்,சிவா ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதனால் மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்கு வரத்த பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். எனவே இருத ரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்திருந்த வட்டாட்சியா் கனி சுந்தரம், நகராட்சி ஆணையா் ஏகராஜ் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினா். பின்னர் இந்திரா நகா் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை, 3 மாதங்களில் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News