உள்ளூர் செய்திகள்
வனப்பகுதியில் உடும்பு பிடித்த 3 பேருக்கு அபராதம் விதிப்பு
- 2 கிலோ எடையுள்ள உடும்பு ஒன்றை வாலிபர்கள் சிலர் பிடித்து, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர்.
- 3 பேருக்கும் வனத்துறையினர் தலா 1 லட்சம் அபராதம் விதித்து கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே பதனவாடி காப்புக்காடு உள்ளது. இங்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள காவிரி கரையோரத்தில் இருந்த சுமார் 2 கிலோ எடையுள்ள உடும்பு ஒன்றை வாலிபர்கள் சிலர் பிடித்து, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர்.
இதையறிந்த மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், பென்னாகரம் வனச்சரகர் செந்தில் குமார் தலைமையிலான வனத்துறையினர் விசா ரணை மேற்கொண்டதில், வீடியோவை பதிவேற்றியது, பென்னாகரம் வட்டம் நெருப்பூரைச் சேர்ந்த அல்லிமுத்து மகன் எழிலரசன் (35), காத்தவராயன் மகன் செந்தில்குமார் (34), காமராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேருக்கும் வனத்துறையினர் தலா 1 லட்சம் அபராதம் விதித்து கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினர்.