உள்ளூர் செய்திகள்

மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளையை படத்தில் காணலாம்.

பெலமாரன அள்ளி மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

Published On 2023-01-17 08:11 GMT   |   Update On 2023-01-17 08:11 GMT
  • மாடுவிடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
  • காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெலமாரன அள்ளி கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு எனப்படும் மாடுவிடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது .

இதன் ஒரு பகுதியாக இன்று பெலமாரன அள்ளி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சு விடும் நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. கோ பூஜை செய்த பின்னர் கிடாவெட்டி தலையை குழிதோண்டி புதைந்த பின்னர். புனித நீர் காளைகளின் மேல் தெளித்த உடன் முதலில் ஊர் கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது.

அதனை தொடர்ந்து கொம்பன் பட்டம் கொம்பில் கட்டி அலங்கரிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வென்றாக அவிழ்த்து விட்டனர். ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர்.சீறி பாய்ந்து வரும் காளைகளின் கொம்பில் உள்ள கொம்பன் பட்டத்தை அதிகமாக அவிழ்த்து எடுக்கும் இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பார்வையாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

Tags:    

Similar News