உள்ளூர் செய்திகள்

வாகன நிறுத்தும் இடமாக மாறிய பாவூர்சத்திரம் பஸ் நிலையம்

Published On 2022-09-10 14:33 IST   |   Update On 2022-09-10 14:33:00 IST
  • பாவூர்சத்திரம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள்.
  • பயணிகள் அமரும் இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அவர்கள் அவதி அடைந்துள்ளனர்.

தென்காசி:

பாவூர்சத்திரம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள கிராம பகுதிகளை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து அதனை பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் பகுதியில் பாதுகாப்பிற்காக நிறுத்திவிட்டு அங்கிருந்து பஸ்கள் மூலம் நெல்லை,தென்காசி,சுரண்டை பகுதிகளுக்கு வேலைகளுக்காக செல்கின்றனர்.

இதனால் மோட்டார் சைக்கிள் நிறைந்து காணப்படும் பயணிகள் அமரும் பகுதியை பஸ் பயணிகள் எவ்வித இடையூறும் இல்லாமல் பயன்படுத்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் தற்போது மோட்டார் சைக்கிள் நிறுத்தும் காப்பகமாக பஸ் நிலையம் காட்சி அளிப்பதால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்திட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News