உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரணிதரன் வாடகைதாரர்களுடன் ஆலோசனை நடத்தியபோது எடுத்தப்படம்.

பாடலீஸ்வரர், ராஜகோபாலசாமி கோவில் இடங்களில் வணிக பயன்பாட்டில் உள்ளவர்கள் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் அதிரடி உத்தரவு

Published On 2023-11-21 07:49 GMT   |   Update On 2023-11-21 07:49 GMT
வாடகைதாரர்கள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் நிலுவைத்தொகையாக கோடிக்கணக்கில் இருந்து வருகின்றது‌.

கடலூர்:

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் மற்றும் ராஜகோபாலசாமி கோவில் இயங்கி வருகின்றது.பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 139 கட்டிட மற்றும் மனை வணிக கட்டிடம், 26 மனை குடியிருப்புகள் உள்ளது. இதில் கட்டிடத்தில் ரூ.2 கோடி 11 லட்சத்து 47 ஆயிரமும், மனையில் ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்து 60 ரூபாயும் வாடகை செலுத்தாமல் நிலுவைத் தொகையாக உள்ளது.இதேபோல ராஜகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமாக கட்டிட மற்றும் மனை வணிக கட்டிடமாக 45 மற்றும் 6 மனை குடியிருப்பு உள்ளது. இதில் கட்டிட வணிகத்தில் ரூ.35 லட்சத்தில் 34 ஆயிரத்து 846, மனையில் ரூ.90 லட்சத்து 5 ஆயிரமும், மனை குடியிருப்பில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 968 ரூபாயும் வாடகை செலுத்தாமல் நிலுவைத் தொகையாக உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் வாடகைதாரர்களுடன் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்றது.அப்போது பாடலீஸ்வரர் மற்றும் ராஜகோபாலசாமி கோவில் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கட்டிட வணிகம், மனை வணிகம் மற்றும் மனை குடியிருப்பில் உள்ள வாடகைதாரர்கள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் நிலுவைத்தொகையாக கோடிக்கணக்கில் இருந்து வருகின்றது.ஆகையால் வருகிற ஒரு மாதத்திற்குள் வணிக பயன்பாட்டில் உள்ள வாடகைதாரர்கள் அனைத்து நிலுவைத் தொகையையும் முழுமையாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உத்தரவிடப்பட்டது. அப்போது பாடலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், ராஜகோபாலசாமி கோவில் சரவண ரூபன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News