உள்ளூர் செய்திகள்

நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றிய போலீசார் மற்றும் அதிகாரிகள்.

நடைபாதையில் ஆட்டோக்களை நிறுத்த தடை

Published On 2023-03-18 15:07 IST   |   Update On 2023-03-18 15:07:00 IST
  • ஓமலூர் செல்லும் மெயின் ரோட்டில் தனியார் மேல்நிலை பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரி, செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது.
  • சாலையின் இரு புறமும் சாலை விரிவாக்கம் செய்து புதிய நடைபாதையை நெடுஞ்சாலை துறையினர் அமைத்துள்ளனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் மெயின் ரோட்டில் தனியார் மேல்நிலை பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரி, செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது.

காலை, மாலை வேளையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் தாரமங்கலம் பேருந்து நிலையம் முதல் பள்ளி செல்லும் போதும், மாலையில் பேருந்து நிலையம் செல்லும் வரை சாலையின் இரு புறமும் சாலை விரிவாக்கம் செய்து புதிய நடைபாதையை நெடுஞ்சாலை துறையினர் அமைத்துள்ளனர். ஆனால் இந்த நடைபாதையை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் ஆட்டோக்கள், பொக்லைன் எந்திரங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

மேலும் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்தும் வந்துள்ளனர். சாலையில் பயத்துடன் கடந்து செல்லும் மாணவிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து இருப்பதாக கூறி சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு புகார் கடிதம் அனுப்பினர்.

மனுவின்மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்ததின் பேரில் நேற்று சம்மந்தபட்ட இடத்திற்கு தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ், முரளிதரன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், நெடுஞ்சாலை ஆய்வாளர் அருணாசலம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரவிச்சந்திரன், ஓன்றியக்குழு தலைவர் சுமதிபாபு மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.

பின்னர் ஆட்டோ ஓட்டுநர்களிடம் இந்த இடம் பாதசாரிகள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட இடம், இங்கு வாகனங்களை நிறுத்த கூடாது என்று கூறி நடைபாதையில் நிறுத்தி இருந்த ஆட்டோக்களை அப்புறபடுத்தினர்.

மேலும் இந்த இடத்தில் மீறி வாகனங்களை நிதித்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

Tags:    

Similar News