கலெக்டர் மகாபாரதி
குழந்தைகள் நீர்நிலைகளில் இறங்கிடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்
- விவசாயிகள் அனைவரும் தண்ணீரை முறையாக பயன்படுத்த வேண்டும்.
- பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்-அமை ச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந் தேதி திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் அனைவரும் தண்ணீரை முறையாக பயன்படுத்தி நீர்பங்கீட்டில் நீர்வளத்துறை அலுவ லர்களுடன் ஒத்துழைத்து பயன்பெற வேண்டும். நிலை மைக்கேற்ப பாசனத்திற்கு முறைவைத்து தண்ணீர் விடப்படும்.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடுதல் தொடர்பாக அவ்வப்போது விளம்பரம் செய்யப்படும். காவேரி வடிநில பகுதிகளில் தண்ணீர் திறந்துவிடும் போது நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ அல்லது இதரபொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம். மேலும், குழந்தைகள் நீர்நிலைகளில் இறங்கிவிடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
தண்ணீர் திறந்துவிடும் போது விலங்குகள், நீர்நிலைகளில் கடந்து செல்லும்போது பாதுகாப்பாக விவசாயிகள் கடந்து செல்ல வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.