உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் காட்டூர், பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற காட்சி.

பண்ணாரி மாரியம்மன் கும்பாபிஷேக விழா

Published On 2022-12-04 14:01 IST   |   Update On 2022-12-04 14:01:00 IST
  • காட்டூர், பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது.
  • நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மேள தாளங்களுடன் நடைபெற்றது.

குமாரபாளையம்:

குமாரபாளையம் காட்டூர், பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மேள தாளங்களுடன் நடைபெற்றது. இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று காலை 8 மணியளவில் நடைபெற்றது. லோகானந் சாஸ்திரிகள் குழுவினர் யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேக விழாவை நடத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News