உள்ளூர் செய்திகள்

அரூர் அருகே காட்டெருமை தாக்கி சிகிச்சை பெற்று வரும் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல்.

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காட்டெருமை தாக்கி படுகாயம்

Published On 2023-10-30 15:02 IST   |   Update On 2023-10-30 15:02:00 IST
  • அரூர் அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காட்டெருமை தாக்கி காயம் அடைந்தார்.
  • வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி ஊராட்சி மன்றதுணை தலைவராக இருப்பவர் சக்திவேல் வயது(28). இவர் கடந்த 28 ந்தேதி, தருமபுரி கலெக்டர் அலுவலக கூட்டத்தில்கலந்து கொண்டு விட்டு இரவு 8 மணியளவில் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சித்தேரி மலை பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டம்பட்டி பிரிவு சாலையில் சென்றபோது, அவரை ரோட்டில் நின்று வழிமறித்து காட்டெருமை ஒன்று அவரை தாக்கியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உதவி கோரி அவர் எழுப்பிய சத்தம் கேட்டுட வந்த கிராம மக்கள், அவரை மீட்டு அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த தகவலின்பேரில், உதவி வனபாதுகாவலர் சரவணன், அரூர் வனச்சரக அலுவலர் நீலகண்டன் ஆகியோர் சக்திவேலை சந்தித்து காட்டெருமை தாக்குதல் குறித்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News