உள்ளூர் செய்திகள்

பாம்பாறு அணை 19.68 அடி முழுகொள்ளளவு எட்டியது

Published On 2023-09-29 15:23 IST   |   Update On 2023-09-29 15:23:00 IST
  • கிருஷ்ணகிரி பாம்பாறு அணை முழுக்கொள்ளவை ்எட்டியது
  • 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு நீர்தேக்கம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, அங்குத்தி சுனை பகுதிகளில் இருந்து அணைக்கு தண்ணீர் வருகிறது.

பாம்பாறு அணையின் மொத்த உயரம் 19.68 அடி. அணையில் திறக்கப்படும் நீர் மூலம் ஊத்தங்கரை வட்டத்தில் மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்த ராஜன்பட்டி, மூன்றம்பட்டி, கொட்டு–காரம்பட்டி, கரிய பெருமாள் வலசை உட்பட 12 கிராமங்களில் 2501 ஏக்கர் விளை நிலங்களும், தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தா.அம்மாபோட்டை, வேடகட்டமடுவு மேல்செங்கம்பாடி, ஆண்டியூர் உள்ளிட்ட 4 கிராமங்களில் 1499 ஏக்கர் விளைநிலங்கள் உட்பட 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் ஜவ்வாது மலையில் பெய்த தொடர் மழையால், பாம்பாறு அணைக்கு நீர்வரத்து படிப்–படியாக உயர்ந்து, அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் பொதுப்–பணித்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வெளியேற்றப்படுகிறது. மேலும் உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் ஆற்றில்குளிக்கவும் செல்பி எடுக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளன.

Similar News