உள்ளூர் செய்திகள்

வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன் பனை விதைகளை நட்ட போது எடுத்த படம்.

திருவெண்ணைநல்லூர் அருகே டி.எடையார் கிராமத்தில் பனை மர விதைகள் நடுப்பணி

Published On 2023-08-26 13:21 IST   |   Update On 2023-08-26 13:21:00 IST
  • 25,000 பனை விதைகள் ஏரி, குளங்கள் மற்றும் புறம்போக்கு பகுதிகளில் நடப்பட்டது.
  • 10,000 எண்ணிக்கையில் மேற்படி மர கன்றுகள் நடப்பட்டது.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தில் பனை மர விதைகள் நடுப்பணி நடைபெற்றது. இப்பணியயினை திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தாய்த் திருநாட்டின் சுதந்திர தின அமுதப் பெருவிழா நிகழ்வுகளைத் தொடர்ந்து என் மண் - எனது தேசம் என்ற சிறப்பு விழிப்புணர்வு திட்ட செயலாக்கத்தின் அடிப்படையில் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றி யத்தைச் சேர்ந்த அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சுமார் 25,000 பனை விதைகள் ஏரி, குளங்கள் மற்றும் புறம்போக்கு பகுதிகளில் நடப்பட்டது.

மேலும் பலன் தரும் மரக்கன்றுகள் (நாவல், இலுப்பை, புங்கண், மகாகனி, நெல்லி, வேம்பு, புளியங்கன்று, தென்னங் கன்று மேலும் பல வகை பலன் தரும் மரக்கன்றுகள்) சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாத்து மழை வளத்தை பெருக்கும் நோக்கத்துடனும் 10,000 எண்ணிக்கையில் மேற்படி மர கன்றுகள் நடப்பட்டது. இதில் தி.மு.க. நிர்வாகி நடன சிகாமணி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுளா வீரன், துணைத் தலைவர் பவானி மகாலிங்கம் மற்றும் வார்டு உறுப்பி னர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News