உள்ளூர் செய்திகள்

பனை விதைகளை கிராம சிறுவர்கள் நடுவதை படத்தில் காணலாம். 

காரைக்கால் கீழவாஞ்சூர் கிராமத்தில் பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி

Published On 2022-08-18 08:23 GMT   |   Update On 2022-08-18 08:23 GMT
  • காரைக்கால் கீழவாஞ்சூர் கிராமத்தில் பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • கிராம இளைஞர்கள் சதீஷ்குமார், திருமுருகன், பூவராகவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

புதுச்சேரி:

காரைக்கால் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாஸ்கர் தலைமை தாங்கி னார். கிராம முக்கியஸ்தர்கள் செல்வராஜ், சசிகுமார், முத்துகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, இயக்கத்தின் தலைவர் ஆனந்தகுமார் அந்த கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோவில் எதிரே உள்ள பள்ளிக் குளத்தின் கரையில், அழிந்துவரும் பனை மரத்தினை காத்திடும் வகையில், பனை விதைகள் நட்டார். அவரைத்தொடர்ந்து, நூற்றுக்கு மேற்பட்ட பனை விதை களை, கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் நட்டனர். கிராம இளைஞர்கள் சதீஷ்குமார், திருமுருகன், பூவராகவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இறுதியில் ரோஹன்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News