உள்ளூர் செய்திகள்

பல்லடம் அரசு அலுவலகங்கள்- பள்ளிகளில் குடியரசு தின விழா

Published On 2023-01-27 05:09 GMT   |   Update On 2023-01-27 05:09 GMT
  • போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசும் தேசிய கொடியேற்றி வைத்தனர்.
  • வருவாய் துறை, உள்ளிட்ட அலுவலகங்கள்,மற்றும் தனியார் நிறுவனங்கள்,ஆகியவற்றில் தேசியக்கொடியேற்றி வைத்து குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பல்லடம் :

பல்லடத்தில் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில், தேசியகொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி தேசிய கொடியேற்றினார்.

விழாவில் ஆணையாளர் ரமேஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அலுவலர்கள்,பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர், பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில், துணை சூப்பிரண்டு சவுமியா தேசிய கொடியேற்றினார்.

பல்லடம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்மணிகண்டனும், போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசும் தேசிய கொடியேற்றி வைத்தனர்.

பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகராட்சி தலைவர் கவிதாமணி தேசிய கொடியேற்றினார். விழாவில் ஆணையாளர் விநாயகம், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள், மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல பல்லடம் அரசு கல்லூரி, பல்லடம் அரசு ஆண்கள் பள்ளி,அரசு பெண்கள்பள்ளி,மற்றும் அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகள்,தனியார் பள்ளிகள், அரசு ஆஸ்பத்திரி, நெடுஞ்சாலைதுறை,வருவாய் துறை, உள்ளிட்ட அலுவலகங்கள்,மற்றும் தனியார் நிறுவனங்கள்,ஆகியவற்றில் தேசியக்கொடியேற்றி வைத்து குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Tags:    

Similar News