உள்ளூர் செய்திகள்

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் புதிய தரைத்தளம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.

பாலக்கோடு பஸ் நிலையம் சீரமைப்பு பணி

Published On 2023-04-25 10:34 GMT   |   Update On 2023-04-25 10:34 GMT
  • பேருந்து நிலையத்தின் தரைதளம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
  • புதிய தரைதளம் அமைக்க 83 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டினார்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் புதிய தரைத்தளம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி முன்னிலை வகித்தார்.பாலக்கோடு பேருந்து நிலையம் கடந்த சில வருடங்களாக சிமெண்ட் தரை தளம் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்பட்டு வந்தது.

இதனால் வாகனங்களின் போக்குவரத்திற்க்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. மழை காலங்களில் பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரானது பேருந்து செல்லும் போது பொது மக்களின் மேல் படுவதால் பொதுமக்களும், பயணிகளும் பெரும் பாதிப்படைந்து வந்தனர்.

பேருந்து நிலையத்தின் தரைதளம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

கோரிக்கையை ஏற்று கடந்த 2-ந் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய தரைதளம் அமைக்க 83 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து நேற்று பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி புதிய தரைத்தளம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் மோகன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News