உள்ளூர் செய்திகள்

பையர் நத்தம் ஏரியில் சாக்கடை கழிவு நீர் கலந்து செல்லும் காட்சி.

நிரம்பி வழியும் பையர் நத்தம் ஏரி: உபரி நீரில் சாக்கடையும் கலந்து வருவதால் விவசாயிகள் கவலை

Published On 2022-11-20 09:52 GMT   |   Update On 2022-11-20 09:52 GMT
  • உபரி நீரில் சாக்கடை நீரும் கலந்து வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
  • மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் உபரி நீரில் சாக்கடை நீரும் கலந்து வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

பையர்நத்தம் ஊர் ஏரி சுமார்100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி தண்ணீர் முலம் பையர் நத்தம், பள்ளிப்பட்டி, லூர்துபுரம் என சுமார் 3 கிலே மீட்டர் தூரம் வரை கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு, நிலத்தடி நீர் உயர்வுக்கு பெரும் பங்காற்றி வருகின்றது.

சேர்வராயன் மலையி லிருந்து உற்பத்தியாகும் இந்த மீனாற்றில் போதக்காடு என்ற இடத்தில் குறுக்கே தடுப்பணை கட்டி கால்வாய் மூலமாக பையர்நத்தம் ஊர் ஏரிக்கு தண்ணீர் எடுத்து வரப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து சில தினங்களுக்கு முன்பு ஏரி அதன் முழு கொள்ளளவை அடைந்தது.

தற்போது உபரி நீர் வாய்க்கால் மூலமாக மோளையனூர் பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரிகளுக்கு செல்கிறது. தற்போது ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் பகுதிகளை துறை சார்ந்த அதிகாரிகள் முறையாக சுத்தம் செய்து, வடிகால்வாய் அமைக்காததால், பையர்நத்தம் பகுதியில் உள்ள கழிவுநீரும் குப்பை கழிவு, பிளாஸ்டிக் கவர்கள், கண்ணாடி பாட்டில் போன்றவை கலந்து விவசாய நிலங்களை பாழ் படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News