உள்ளூர் செய்திகள்

தண்ணீர் பந்தல் திறப்பு

Published On 2023-04-16 15:20 IST   |   Update On 2023-04-16 15:20:00 IST
  • தமிழக மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தமிழக முழுவதும் நீர்மோர் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
  • ஒரு பகுதியாக கடத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் திறக்கப்பட்டது.

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில், முன்னாள் முதல்- அமைச்சரும், கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவுபடி, கோடை காலத்தில் தமிழக மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தமிழக முழுவதும் நீர்மோர் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைைமை தாங்கினார்.

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

இதில் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி, பொது குழு உறுப்பினர் துரை, மாவட்ட கவுன்சிலர் தனபால், சே ர்மேன் உதயா, துணைசேர்மேன் தசத்திவேல், ஒன்றிய துணை செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், முன்னாள் நகர செயலாலர் சசிகுமார், ஒடசல்பட்டி, புதூர், கிளை பொறுப்பாளர்கள் சக்திவேல், மணி உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News