உள்ளூர் செய்திகள்

திட்டக்குடியில் சார்பதிவாளர் அலுவலக பெயர் பலகை கீழே விழுந்து ஒருவர் காயம்

Published On 2023-09-06 07:45 GMT   |   Update On 2023-09-06 07:45 GMT
  • 4 மணியளவில் லேசான காற்று வீசியது.
  • அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடம் வாங்கி விற்பதை பத்திர பதிவு சம்பந்தமாகவும், கடன் பைசல், அடமானம் உள்ளிட்ட பத்திரப்பதிவு சம்பந்தமாகவும் நாள்தோறும் நூற்றுக்க ணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் லேசான காற்று வீசியது. இதில் சார் பதிவாளர் அலுவலக பெயர் பலகை அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மீது விழுந்தது.

இதில் அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது. மேலும், மோட்டார் சைக்கிளின் கண்ணாடி உடைந்தது. காயமடைந்த செல்வராஜ், இது குறித்து சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் கூறினார். இதற்கு பணியில் இருந்த ஊழியர்கள். போலீஸ் நிலையம் சென்று புகார் அளியுங்கள், எங்களிடம் ஏன் சொல்கிறீர்கள் என்று அலட்சியமாக செல்வராஜி டம் பதில் கூறியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் செல்வராஜை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக திட்டக்குடி போலீசாரிடம் செல்வராஜ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் விசாரணை நடத்தி வருகின்றார். அரசு அலுவலகத்தின் பெயர் பலகையை முறையாக அமைக்காததால் கீழே விழுந்து ஒருவருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News