உள்ளூர் செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு சோமேஸ்வர சாமி கோவிலில் சாமி வீதி உலா நிகழ்ச்சி

Published On 2022-10-06 09:52 GMT   |   Update On 2022-10-06 09:52 GMT
  • அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
  • சிறப்பு பூஜைக்கு பின்னர் மகாதீபாராதனை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது.

ஓசூர்,

ஓசூர் நெசவுத்தெருவில் உள்ள சோமேஸ்வர சாமி கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும் அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சிறப்பு பூஜைக்கு பின்னர் மகாதீபாராதனை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது.

நவராத்திரி நிறைவுநாள் மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, கோவிலில் மூலவர் சோமேஸ்வரர், பார்வதிதேவி அம்மன், விநாயகர், முருகன் ஆகிய சாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், கோவில் வளாகத்திலிருந்து உற்சவர் விநாயகர் வாத்திய முழக்கத்துடன் நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலாவாக அழைத்து செல்லப்பட்டார்.

இதில், வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.விழாவையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News