உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் சுதந்திரதினத்தில் மது விற்றவர்கள் கைது

Published On 2023-08-16 11:02 IST   |   Update On 2023-08-16 11:02:00 IST
  • சுதந்திர தினத்தில் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டது.
  • மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

தேனி:

சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து மதுக்கடை களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அன்றைய தினம் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டது.

இருந்தபோதும் சிலர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் தேனி போலீசார் உழவர்ச ந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்ற சுப்பிரமணி (வயது30) என்பவரை கைது செய்து 59 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பழனிசெட்டிபட்டி போலீசார் தெற்கு ஜெகநாதபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது மது விற்ற சின்னச்சாமி (57) என்பவரை கைது செய்து 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கோம்பை போலீசார் துரைசாமிபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது மது விற்பனையில் ஈடுபட்ட மணிமாறன் (42) என்பவரை கைது செய்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News