உள்ளூர் செய்திகள்

பொம்மிடி நெடுஞ்சாலையில் அரசு நிலத்தை கூறு போட்டு விற்கும் ஆக்கிரமிப்பாளர்கள் -நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Published On 2022-12-12 15:32 IST   |   Update On 2022-12-12 15:32:00 IST
  • ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை ஓர காலியிடங்கள் இருந்து வந்தது.
  • காலியாக உள்ள இடங்களை வளைத்து போட்டு அவற்றை 200 அடி, 400 அடி என அளவீடு செய்து சில வியாபாரிகளுக்கு விற்று வருகின்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம் பொம்மிடி ரெயில் நிலையப் பகுதியில் இருந்து தருமபுரி நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை ஓர காலியிடங்கள் இருந்து வந்தது.

இந்தப் பகுதியில் குடியிருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசின் மூலமாக வீட்டுமனை பட்டா கொடுத்து 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.

அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேறும்படி நெடுஞ்சாலை துறை பலமுறை முயற்சித்தும் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேறாமல் அப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிலர் இடங்களை காலி செய்து வேறு இடத்திற்கு குடியேறிவிட்டனர். இதை புரிந்து கொண்டு சமூக விரோதிகள் சிலர் தருமபுரி நெடுஞ்சாலை, ஓமலூர் நெடுஞ்சாலையில் உள்ள காலியாக உள்ள இடங்களை வளைத்து போட்டு அவற்றை 200 அடி, 400 அடி என அளவீடு செய்து சில வியாபாரிகளுக்கு விற்று வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், நெடுஞ்சா லைத்துறை தீவிர நடவடிக்கை எடுக்காததால் இப்பகுதியில் இடம் பிடிப்பதில் இரு தரப்பினர்களுக்கு இடையே அடிக்கடி கைகலப்பு ,வாய் சண்டை, காவல் நிலையம் செல்லுதல்,பொது இடங்களில் சண்டையிடுவது போன்ற சம்பவங்கள் தினம் தோறும் நடந்து வருகிறது.

கடுமையான நட வடிக்கை இல்லாததால் இப்பகுதியில் பெருமளவு நெடுஞ்சாலைத்துறை சொத்துக்கள் ஆக்கிரமிப்பா ளர்களாலும், சமூக விரோதிகளாலும் பெரு மளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சட்ட விரோதமாக விற்கும் நிகழ்வுகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

Similar News