பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க ெபாறுப்பாளர் சிவபத்மநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தின அமைதி பேரணி
- அமைதி பேரணியை மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
- கருணாநிதி உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அனுசரிக்கப்பட்டது. பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற அமைதி பேரணியை மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில் இருந்து கருணாநிதியின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் ஏந்தியபடி புறப்பட்ட பேரணியானது பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் ராஜா எம்.எல்.ஏ., தொழில் அதிபர் ஆ.கே.காளிதாசன் ஆலடி எழில்வாணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், ஒன்றியச் செயலாளர்கள் சீனிதுரை, சிவன் பாண்டியன், அழகுசுந்தரம் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள், கிளை, வார்டு நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.