உள்ளூர் செய்திகள்
அன்னசாகரம் சாலையில் மூடி உடைந்துள்ள குடி நீர் தொட்டியால் விபத்து அபாயம்
- குடிநீர் குழாய் தொட்டியில் மோதி கீழே விழும் அபாயம் உள்ளது.
- குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி நகராட்சி அன்னசாகரம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் வால்வுக்காக அமைக்கப்பட்ட தொட்டி யின் மூடி உடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் சாலையை கடப்பவர்கள் சாலையின் நடுவே குழி இருப்பதை அறியாமல் குடிநீர் குழாய் தொட்டியில் மோதி கீழே விழும் அபாயம் உள்ளது.
அன்னசாகரம் சாலையை காரவோனி, மாதேமங்கலம், வெங்கடம்பட்டி, குட்டூர், எட்டியானூர், எட்டிமருத்துப்பட்டி, கொமத்தம்பட்டி, உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அசம்பாவிதங்கள் நிகழ்வ தற்கு முன் வால்வு சிலாப்பினை சீரமைத்து குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.