உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவரை படத்தில் காணலாம்.

சிறுமலையில் புனுகு பூனையை வேட்டையாடிய முதியவர் கைது நாட்டுத்துப்பாக்கி, வெட்டரிவாள் பறிமுதல்

Published On 2022-08-24 07:47 GMT   |   Update On 2022-08-24 07:47 GMT
  • திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலையில் நாட்டுத்துப்பாக்கிகள் அதிகளவில் பயன்படுத்தப் படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
  • வன விலங்குகளை வேட்டையாடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலையில் நாட்டுத்துப்பாக்கிகள் அதிகளவில் பயன்படுத்தப் படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி தாழக்கடை பகுதியில் புனுகுபூனை வேட்டையாடப் பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி வன பாதுகாவலர் நாகையா தலைமையிலான அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதிைய சேர்ந்த முத்தன் (65) என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் புனுகுபூனையை வேட்டையாடி அதனை பாடம் செய்து வைத்திருந்தார்.

இதனையடுத்து அவரை போலீசார் பிடித்து வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கி, 2 வெட்டரிவாள்கள், தோட்டா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் சிறுமலை வனச்சரகர் மகேந்திரன் முத்தனை கைது செய்து போலீஸ் காவலுக்கு அனுப்பி வைத்தார்.

சிறுமலை பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகள் யாரேனும் வைத்திருந்தால் ஒப்படைக்க வேண்டும் எனவும், வன விலங்குகளை வேட்டையாடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்தனர்.

Tags:    

Similar News