- திருச்சி அருகே லாரி மோதி மூதாட்டி-வாலிபர் பலி லிப்ட் கேட்டு சென்ற போது நேர்ந்த சோகம்
- இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்துள்ளார்
திருச்சி
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட அளுந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாமணி (வயது 65) நாகமங்கலத்திற்கு செல்ல இரு சக்கர வாகனத்தில் லிபட் கேட்டு நின்று கொண்டிருந்தார். அப்பொழுது மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற செல்வம் என்பவரது இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு பின் சீட்டில் அமர்ந்து பாலாமணி பயணித்துள்ளார்.
அப்போது அளுந்தூர் அரசு ஐடிஐ எதிரே சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்து சம்பவத்தில் மூதாட்டி, வாலிபர் இருவரும் தூக்கி விசப்பட்டனர்.
இதில் பாலாமணி சம்பவ இடத்திலேயே பலியானர். விபத்து ஏற்படுத்திய லாரி விற்காமல் வேகமாக சென்றுவிட்டது. இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் இருசக்கர வாகனத்தை ஒட்டிய செல்வம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் அந்த பகுதி மக்கள் உடனடியாக மீட்டு அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய லாரியை ஒரு மணி நேரத்தில் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.