உள்ளூர் செய்திகள்

துரித உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து கெட்டுபோன இறைச்சி மற்றும் உணவு பொருட்களை அழித்த காட்சி.

81 துரித உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-09-23 10:23 GMT   |   Update On 2023-09-23 10:23 GMT
  • தரமில்லாத உணவுகள் விற்பனை செய்யும் உணவங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
  • 5 சவர்மா, 15 சிக்கன் ரைஸ் மாதிரி எடுத்த உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பர்கூரில் உள்ள 81 உணவகங்கள் மற்றும் துரித உணவகங்களில், உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பி ல் கூறியிருப்பதாவது:-

 கிருஷ்ணகிரியில் உள்ள சக்தி துரித உணவகத்தில் கடந்த 18-ந் தேதி சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வடமாநில தொழிலாளர்கள் 26 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இவர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். இதில் 14 பேர் நலமுடன் வீடு திரும்பினர். 13 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி மற்றும் பர்கூர் பேரூராட்சி யில் உள்ள 81 உணவகங்கள், துரித உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கெட்டு போன இறைச்சி, சுகாதாரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

ஓசூர், கிருஷ்ணகிரி பகுதியில் செயல்பட்டு வரும் துரித உணவகத்தில் இருந்து 5 சவர்மா, 15 சிக்கன் ரைஸ் மாதிரி எடுத்த உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. மேலும், மாவட் டத்தில் உள்ள அனைத்து துரித உணவகங்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், அனைத்து உணவகங்கள் மற்றும் துரித உணவங்கள் தரமான பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் சமையல் செய்து பொது மக்களுக்கு விற்பனை செய்ய உணவக உரிமையா ளர்களுக்கு அறிவுறுத்தப்படு கிறது. தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Similar News