உள்ளூர் செய்திகள்

சோதனை முடிவில் முகமது கைசரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற காட்சி.

பி.எப்.ஐ. மதுரை மண்டல தலைவர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை- கைது செய்து அழைத்து சென்றதால் பரபரப்பு

Published On 2023-05-09 03:47 GMT   |   Update On 2023-05-09 03:47 GMT
  • முகமது கைசர் வீட்டிற்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
  • என்.ஐ.ஏ. அதிகாரிகள் பழனியில் விசாரணை நடத்திய நிலையில் முகமது கைசரை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). பழனியில் டீக்கடை நடத்தி வரும் இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளயில் முகமது கைசர் வீட்டிற்கு வந்த என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே இவரது வீட்டில் 2 முறை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்திச் சென்றனர்.

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியின் உறுப்பினர்கள் சதாம், ஜியாவுல்ஹக் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த ஹபீப் ரகுமான் ஆகிய 4 பேர்களிடம் கடந்த ஜனவரி மாதம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது திருப்புவனம் ராமலிங்கம் படுகொலை, கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்துவதாக தகவல் வெளிவந்துள்ளது.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் பழனியில் விசாரணை நடத்திய நிலையில் அவரை கைது செய்து ஜீப்பில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். இச்சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News