உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

Published On 2022-11-26 09:15 GMT   |   Update On 2022-11-26 09:15 GMT
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் ேததி வரை புதிய உறுப்பினர்கள் சேர்வதற்கான முகாம் சங்க வளாகத்தில் நடக்க உள்ளது.
  • புதிய உறுப்பினர்களாக சேர்ந்து தேவைப்படும் கடனுக்குரிய கடனை மனுவை சமர்ப்பித்து கடன் பெற்று கொள்ளலாம்.

ஊட்டி,

நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கீழ்க்கண்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் ே ததி வரை புதிய உறுப்பினர்கள் சேர்வதற்கான முகாம் சங்க வளாகத்தில் நடக்க உள்ளது. இந்த முகாமில் இதுவரை உறுப்பினராக சேராமல் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது ஆதார்நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அளித்து உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

ஜெகதளா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஆலட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கவரட்டி ஸ்ரீவேல்முருகன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கன்னேரி மந்தனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மூரட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், எடக்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் புதிய உறுப்பினர் முகாம் நடைபெறும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன், மத்திய கால கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்று திறனாளிகளுக்கான கடன், சுய உதவிக்குழு கடன் மற்றும் நகைக்கடன் வழங்கப்படுகிறது. நில உடமை தொடர்பான சிட்டா, பயிர்க்கடன் தொடர்பான தாசில்தாரின் அனுபோன சான்றிதழ் மற்றும் அடங்கல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றை அளித்து பயிர்க்கடன் பெற்று கொள்ளலாம். எனவே அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு புதிய உறுப்பினர்களாக சேர்ந்து தேவைப்படும் கடனுக்குரிய கடனை மனுவை சமர்ப்பித்து கடன் பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News