உள்ளூர் செய்திகள்

விழாவில் தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் பேசினார்.

கொசவபட்டியில் அரசு சமுதாய நல நிலையத்தில் புதிய கட்டிடம்

Update: 2022-08-10 07:35 GMT
  • சமுதாய நல நிலையத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
  • இந்த பணிகள் நிறைவுபெற்று இன்று கட்டிட திறப்பு விழா நடந்தது

குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் சமுதாய நல நிலையத்தில் அம்பிகா காட்டன் மில் சார்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை, மாற்று திறனாளிகளுக்கான சாய்வு தளம் அமைத்தல், பேவர் கற்கள் பதித்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.8 லட்சம் மதிப்பில் நடைபெற்றது.இந்த பணிகள் நிறைவுபெற்று இன்று புதிதாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழா நடந்தது.

இதற்கு துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) வரதராஜன் தலைமை தாங்கினார்.வட்டார மருத்துவ அலுவலர் மோகன்ராஜ் வரவேற்புரை ஆற்றினார்.சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இதில் அம்பிகா காட்டன் மில் பொது மேலாளர் வீரக்குமார், பஞ்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சலேத்மேரி ஜான் பீட்டர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிறைவாக கண்காணிப்பாளர் மைக்கேல் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் முனியப்பன், அழகுராஜா, குணசீலன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News