உள்ளூர் செய்திகள்

நெல்லை பல்கலைக்கழக முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு - பதிவாளர் தகவல்

Published On 2023-03-03 14:38 IST   |   Update On 2023-03-03 14:38:00 IST
  • நெல்லை பல்கலைக் கழகத்தில் முதுநிலை பாடப்பிரிவு தேர்வுகள் கடந்த ஜனவரி 13-ந் தேதி முடிவடைந்தது.
  • விடைத்தாள் நகலை பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

நெல்லை:

நெல்லை பல்கலை கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நவம்பர் 2022-ல் நடத்தப் பட்ட முதுநிலை பாடப்பிரிவு களுக்கான தேர்வுகள் அனைத்தும் கடந்த ஜனவரி 13-ந் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் ஒரு மாத காலத்திற்குள் தேர்வுதாள்கள் திருத்தும் பணி முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 28-ந் தேதி வெளி யிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரி வழியாகவோ அல்லது www.msuniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் வழியாகவோ அறிந்து கொள்ளலாம்.

முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கான தேர்வுக ளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மறு மதிப்பீடு செய்ய விருப்பம் உடையவர்கள் அதற்குரிய படிவங்களை www.msuniv. ac.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் முதலில் விடைத்தாள் நகலைப் பெற்றுக் கொண்ட பின்னனர் தான் மறுமதிப்பீடு செய்து விண்ணப்பிக்க முடியும்.

விடைத்தாள் நகலை இணையதளம் வழியாக பெறுவதற்கு உரிய கட்டணத்துடன் படிவம் ஏ மூலம் இன்று (3-ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். வருகிற 9-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

விடைத்தாள் நகல்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவேற்றம் செய் யப்படும். அதன் பின்னர் மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க லாம். மறு மதிப்பீடு செய்ய இணையதளம் வழியாக உரிய கட்டணத்துடன் படிவம் பி யை வருகிற 16-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண் ணப்பிக்க கடைசிநாள் மார்ச் 21-ந் தேதி ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News